Monday, February 15, 2010

தலைவன்

இந்த மாதம் முடியும் போது அதிசயம்.
வீட்டுச் செலவில் ஐநூறு ரூபாய் மிச்சம் இருந்தது
நீண்ட நாள் ஆசை!
ஷு வாங்க வேண்டும். அதுவும் ஸ்லிப் ஆன் ஷு வாங்க வேண்டும்
அலுவலகம் போகும்போது ஜம்மென்று போட்டுக் கொண்டு போக வேண்டும்
ரூபாய் ஐநூறுக்குள் தானே இருக்கும்?!

நாளைக்குக் கடைத்தெருவுக்குப் போகலாம் என்று மனைவியிடம் சொன்னேன்
கடைக்குக் கிளம்பும் போது மகளும் ஒட்டிக் கொண்டாள்

ஷு கடைக்குள் நுழைந்ததும் மகள் கண்ணில் பிங்க் நிற செருப்புப் பட்டுவிட்டது

“அப்பா எனக்கு அது வேணும்” என்று அடம் பிடித்தாள்

“ஏங்க காலில் பித்த வெடிப்பாய் இருக்கு. எனக்கும் காலை மூடற மாதிரி கான்வாஸ் செருப்பு வாங்கித் தர்ரீங்களா” என்றாள் மனைவி.

மகளுக்கும், மனைவிக்கும் செருப்பு வாங்கியதில் நானூறு ரூபாய் பணால்.

கடையை விட்டு வெளியே வரும் போது மனைவி கேட்டாள்

“ஏங்க நீண்ல் நாளாய் உங்களுக்கு ஷு வாங்கணும்னு சொன்னீங்களே, வாங்கிக்க வேண்டியது தானே”

“பரவாயில்லை, அப்புறம் பார்க்கலாம் என்றேன்.

“ஒரே சமயத்திலே நிறைய பணம் செலவழிக்க மனசு வராதே” என்று கிண்டலடித்தாள்.

புது செருப்பு வாங்கிய திருப்தியை அவர்கள் முகத்தில் கண்டவாறு சிரித்தேன்.

7 comments:

  1. உண்மையான மன நிறைவு அடுத்தவங்க சந்தோஷத்துலதான்..

    ReplyDelete
  2. ஒரு நல்ல சிறுகதையை படித்த திருப்தி.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  3. வருக, இதுபோல நல்ல கதைகள் தருக!

    ReplyDelete
  4. அருமையான பதிவு, திரு பாஸ்கர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!!

    ReplyDelete
  5. ஹைய்யா!
    கிருஷ்ணா அவதாரம் எடுத்துவிட்டார்.
    இனி நாம் பிளாக்கில் படிக்கப்போவது அனைத்துமே பகவத் கீதை தான் !

    ReplyDelete
  6. ரொம்ப
    நாளாச்சு
    உங்க கதை
    படிச்சு.
    நன்று.

    ReplyDelete